• vilasalnews@gmail.com

அங்கன்வாடி காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அரசாணை!

  • Share on

தமிழகம் முழுவதும் 7,783 அங்கன்வாடி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாடு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான அங்கான்வாடி மையங்கள் செயல்படுகிறது. இந்த மையங்களில், இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,783 அங்கான்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். மேலும், பணியாளர்களை தேர்வு செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.


3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் என மொத்தம் 7,783 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


அங்கன்வாடி மற்றும் மின் அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அங்கன்வாடி பணியாளர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அங்கன்வடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 20 முதல் 40 வயரை இருக்கலாம். பட்டியல், பழங்குடியின வகுப்பினர், ஆதாரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு வயது வரம்பில் கூடுதலாக 5 வருடங்கள் தளர்வு உண்டு.


இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விரைவில் மாவட்டம் வாரியக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்து தப்ப முயன்ற விஏஓ அதிரடி கைது!

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு!

  • Share on