• vilasalnews@gmail.com

நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாட்களுக்கு ரத்து.. வெளியான ஷாக் நியூஸ்!

  • Share on

ரயில் பாதை சீரமைப்பு பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நெல்லை திருச்செந்தூர் இடையே தினமும் மாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், திருச்செந்தூர் நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் வருகின்றன மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.


இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயிலும், போத்தனூரில் இருந்து காலை 09.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலும் வரும் 16ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  • Share on

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் ஸ்ரீ தம்புராட்டி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா!

நடிகர் விஜய்யை உலுக்கிய மரணம்... கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்!

  • Share on