• vilasalnews@gmail.com

1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்; வாடிக்கையாளர்களை கவரும் பேக்கரி

  • Share on

ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக திருச்சி பேக்கரி  கடை ஒன்றில் வழங்கப்படுகிறது

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுவரும் நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேக்கரி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களை கவரும் விதம் வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு பெட்ரோல் கூப்பன் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அந்த கூப்பனை கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகை குறித்து பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் குறிப்பிடும்போது, இந்த சலுகை அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார். 


"ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்ற இலவசங்களை வழங்கினால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது. தற்போது பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இது ஒரு சூசகமான வழி" என்பதையும் தெரிவித்தார். இச்சலுகை ஒரு மாதம் உள்ளது என்றார்.

மேலும் இதற்கு முன்பு ஒரு கிலோ கேக் வாங்கினால் குடை ஒன்று இலவசம் என்பதையும் அறிவித்திருந்தோம் என குறிப்பிட்டார் .இந்த பேக்கரி கடையின், பெட்ரோல் இலவச அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் நேர்காணல் - அதிமுக முடிவு

வெளியானது அ.தி.மு.க-வின் முதல் வேட்பாளர் பட்டியல்

  • Share on