• vilasalnews@gmail.com

தமிழக எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறை தண்டனை : உறுதி செய்த உயர்நீதிமன்றம்

  • Share on

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக 1.55 கோடி நிதி பெற்ற வழக்கில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


கடந்த 1997 ல் வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்தது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கு ஒரு ஆண்டு சிறையும், எஸ் சையத் நிசார் அகமத், ஜிஎம் ஷேக் மற்றும் நல்ல முகமத் கலஞ்சிம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.


இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கீழ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீட்டுக்காக தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.


  • Share on

அரசு புறம்போக்கு நிலமா என உறுதி செய்ய வேண்டும்!

முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் ஸ்ரீ தம்புராட்டி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா!

  • Share on