
டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ரூ.1000 கோடிக்கும் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளது என்றும், அதிகாரிகள் - நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு, டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் என்னென்ன குற்றச்சாட்டுகள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது.
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
பார் உரிமங்கள் வழங்குவதிலும், இதற்கான ஒப்பந்தங்களிலும் தவறு நடந்துள்ளது.
திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடந்துள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முறையான கேஒய்சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, கட்டடம் உட்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல எஃப் ஐ ஆர் பதியப்பட்டதன் அடிப்படையில் டாஸ்மாக்கில் விசாரணை நடைபெறுகிறது.
முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரனை நடைபெற்று வருகிறது.