
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களை பாலியலில் ஈடுபட வைத்து பணம் பறிக்க முயன்ற வழக்கில், யூடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்தி மற்றும் ஆனந்த் ஆகிய நான்கு பேரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த நான்கு பேரும் ஜனவரி 29ஆம் தேதி முதல் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா, சித்ரா, கார்த்தி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதால, மூவரையும் குண்டத்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து யூடியூபர்கள் சித்ரா, திவ்யா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.