
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோவில் நகரம் என்று அழைக்கப்படும். திரும்பிய பக்கம் எல்லாம் கோயில்கள் அமையப்பெற்றுள்ளதே அதற்கு காரணம்.
இத்தகைய கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமகக் குளத்தில் புனித நீராடுவார்கள்.
மாசி மகத் திருவிழா இந்த ஆண்டு வரும் மார்ச் 12ம் தேதி (புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.
இந்த விடுமுறையை ஈடுகட்ட வரும் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, மார்ச் 11ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.