• vilasalnews@gmail.com

பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்

  • Share on

பாஜக மாவட்ட தலைவர் மீது, அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் வி.ஏ.டி. கலிவரதன், அதே கட்சியை  சேர்ந்த காயத்ரி என்பவர் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொது செயலாளராக உள்ளார். அவர்,

பாஜக மாநில தலைமைக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்  :

மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்குவதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாகவும், பல முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குற்றச்சாட்டியுள்ளார்.மேலும், இதுகுறித்து மாநில தலைமை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாவட்ட தலைவர் மீது, அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர்  கொடுத்துள்ள பாலியல் புகாரால் விழுப்புரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Share on

அண்ணன் காதலித்த பெண் தம்பியுடன் ஓட்டம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்

  • Share on