• vilasalnews@gmail.com

சீமான் மீதான பாலியல் வழக்கு... இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

  • Share on

நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்கிறது.


நடிகை ஒருவர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு மீதான விசாரணை கடந்த 17ம் தேதி நடைபெற்றது. அப்போது, நீதிபதி கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை 12 வாரத்துக்குள் காவல்துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. ஆகவே, தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.


மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, 12 வாரங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில்  இன்று விசாரணைக்கு வருகிறது. 

  • Share on

17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வெங்கடேச பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளி கைது!

7 நபர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு தமிழக கோவில்களில் சிறப்பு தரிசன முன்னுரிமை!

  • Share on