• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் : பெண் உட்பட 2 பேர் கைது

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


ஆந்திர மாநிலத்திலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக, தூத்துக்குடி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் எழில்சுரேஷ் சிங் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் அனிதா வேணி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் முருகன், மல்லிகா உள்ளிட்ட போலீசார் தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே நேற்று ரோந்து சென்றனர்.


அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், தஞ்சாவூரை சேர்ந்த தனலட்சுமி(56), மதுரை சிலோன்காலனியை சேர்ந்த முருகன்(58) என்பதும் அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை தூத்துக்குடிக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இருவரிடமிருந்தும் மொத்தம் 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


  • Share on

நேற்று கோவை... இன்று திருப்பூர் : பாலியல் வன்கொடுமைகளால் அதிரும் தமிழகம்!

என்ன சார் இப்படி சொல்றீங்க... சர்ச்சையை கிளப்பிய கலெக்டர்!

  • Share on