• vilasalnews@gmail.com

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா : தெறிக்கவிட்ட மாட்டுவண்டி எல்கை பந்தயம்!!

  • Share on

பெருநாழி அருகே மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.


இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம் T. குமாரபுரம் கிராமத்தில், மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெருநாழி சுற்றுவட்டார இராஜகம்பளத்தார் நாயக்கர் சமுதாய பொதுமக்கள் சார்பில் மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.


நடுமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், நடுமாட்டிற்கு போக வர 8 மைல் தூரமும், சின்ன மாட்டிற்கு போக வர 6 மைல் தூரமும் இலக்காக தீர்மானிக்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயமானது T.குமாரபுரம் கிராமத்தில் இருந்து அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்றது.


முதலில் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை வைப்பார் ராம் நாயக்கர் நினைவாக மணிகலா  வண்டியும், 2-வது பரிசை நல்லமாள் நினைவாக நல்லுத்தேவர் கே.வேப்பங்குளம் - அதிகரை வேங்கை சேர்வை சிவகங்கை - ஜாகீர் உசேன் பூலாங்கால், 3-வது பரிசை ஆர்ஜிஆர் சித்திரங்குடி வண்டி, 4-வது பரிசை கம்பத்துப்பட்டி பால்பாண்டி  வண்டியும் பெற்றன. பின்னர் தொடர்ந்து சின்னமாடு வண்டி பந்தயம் நடைபெற்றது.


இப்போட்டியை சாலையில் இருபுறங்களிலும் நின்று பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து ரசித்து, காளைகளுக்கும், சாரதி, பின்சாரதிகளுக்கு ஆரவாரமிட்டு உற்சாகம் அளித்தனர்.

  • Share on

கே. புதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு : ஒருவருக்கு ஆயுள்; 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை!

லஞ்சம் வாங்குவதில் கறார் காட்டிய ஸ்டிரிக்ட் ஆபீசர்... பாய்ந்தது வழக்கு!

  • Share on