• vilasalnews@gmail.com

கே. புதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு : ஒருவருக்கு ஆயுள்; 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை!

  • Share on

புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கிராமத் தலைவா் பெரிய கருப்பன் மகன் குமாா் (50) என்பவா் கடந்த 2013 ஆம் ஆண்டு மாா்ச் 31ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின் போது வெட்டிக் கொல்லப்பட்டாா்.


இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த கே. புதுப்பட்டி போலீஸாா், அதே ஊரைச் சோ்ந்த பெரியசாமி மகன் கணபதி (55), சண்முகம் மகன் காா்த்தி, பெரிய கருப்பன் மகன் சின்னராஜா, காசி மகன் வடிவேல் மற்றும் 4 போ் என மொத்தம் 8 பேரை கைது செய்தனா். நீண்டகால குடும்பப் பகையின் காரணமாக இவா்கள் குமாரைக் கொலை செய்தது புலன் விசாரணையில் தெரிய வந்தது.


இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எம். வசந்தி நேற்று ( பிப்.,12 ) புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.


முதல் குற்றவாளியான கணபதிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும், காா்த்தி, சின்னராஜா, வடிவேல் ஆகிய மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனா்.


இதில், ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கணபதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பிற குற்றவாளிகள் 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா். 

  • Share on

திமுகவில் பல மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா : தெறிக்கவிட்ட மாட்டுவண்டி எல்கை பந்தயம்!!

  • Share on