• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

  • Share on

வேலூர் அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டு அந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளேயே,  திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான இளம்பெண் தூத்துக்குடியில் உள்ள போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். 


இந்நிலையில் அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்ததன் பேரின் நேற்று தூத்துக்குடியில் இருந்து ஈரோடு செல்லும் ஓகா விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்துள்ளார்.


ரயில் விருதுநகர் வந்த போது அருப்புக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் பெண் ஏறிய அதே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறியுள்ளார். மேலும் மதுபோதையில் இருந்த சதீஷ்குமார், ஈரோடு நோக்கி சென்ற பெண்ணின் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது கொடைக்கானல் ரோடு அருகே ரயில் வரும்போது அந்த பெண்ணுக்கு சதீஷ்குமார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 


இதையடுத்து அந்த இளம்பெண், 139 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைத்து பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்துள்ளார். தகவலறிந்த போலீசார், ஓகா விரைவு ரயில் திண்டுக்கல் வந்தபோது பாலியல் தொல்லை அளித்த சதீஷ்குமாரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சமீபத்தில் வேலூர் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு ரயிலில் பாலியல் தொல்லைக்கு இளம் பெண் ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம் : நாளை ( பிப்.,3 ) கொடியேறுகிறது!

திமுகவில் பல மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

  • Share on