• vilasalnews@gmail.com

தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலம் : நாளை ( பிப்.,3 ) கொடியேறுகிறது!

  • Share on

கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய தலம் தான் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்.


அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமியை பெரியசாமி என்று அழைத்து வந்தனர். தற்போது உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேப்பமரக்காற்று மணமணக்க, பனைமரக்காற்று சலசலக்க வெண்மணல்கள் கம்பளம் விரிக்க, கடல் அலைகள் சாமரம் வீச அழகாக காட்சி தருகிறார் உவரி சுயம்புலிங்க சுவாமி.


தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நாளை 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 


விழாவில் நாளை 3ம் தேதி முதலாவது திருவிழாவில் அதிகாலை யதாஸ்தானத்தில்  இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, யானை மீது கொடி பட்டம் ஊர்வலம், காலை 6 மணி முதல் 7.30 மணி கொடியேற்றம், விநாயகர் திருவீதி உலா, உச்சிக்கால பூஜை, சிறப்பு அன்னதானம் நடக்கிறது.


மாலையில் சிறப்பு அபிஷேகம், சாயரட்சை சிறப்பு பூஜை, இரவில் சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை இந்திர விமான வாகனத்தில் வீதி உலா, சேர்க்கை தீபாரதனை மற்றும் நாதஸ்வர இன்னிசை, பரதநாட்டியம், சமய சொற்பொழிவு, வழக்காடு மன்றம் நடக்கிறது.


ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை!

தூத்துக்குடியில் இருந்து ரயிலில் சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

  • Share on