• vilasalnews@gmail.com

போலாம் ரைட்... தமிழ்நாடு அரசுப் பேருந்தில் பெண் நடத்துநர் நியமனம்!

  • Share on

நீலகியில் முதல் அரசுப் பேருந்து பெண் நடத்துநராக பணியில் சேர்ந்துள்ள சுகன்யா, பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தனது பணி இருக்கும் என தெரிவித்துள்ளார்.


கருப்பசாமி என்பவர் கோவை மண்டலத்தின் கோத்தகிரி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இழப்பால் குடும்பமே நிலைகுலைந்து தவித்திருக்கிறது. இதனால் கருணை அடிப்படையில் வேலை கேட்டு அவரது மனைவி சுகன்யா விண்ணப்பித்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதோடு தனது குடும்ப கஷ்டத்தை விளக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனுவும் அனுப்பினார். அதில், ஓட்டுநர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் அதை சிறப்பாக மேற்கொள்வதாக சுகன்யா குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து சுகன்யாவிற்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். அதனைத் தொடர்ந்து சுகன்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கு உடனடியாக பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து, சுகன்யாவிக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் பணி வழங்கப்பட்டது.


அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில் நீலகிரி கோத்தகிரி கிளையில் நடத்துநராக சுகன்யா பணியில் சேர்ந்தார். அவருக்கு நீலகிரி - கோத்தகிரி பேருந்தில் நடத்துநர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகன்யாவுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


இது குறித்து தெரிவித்துள்ள நடத்துநர் சுகன்யா:-


வறுமையை சமாளிக்க எனக்கு இது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளையும் காப்பாற்ற இந்த முடிவை துணிந்து எடுத்தேன். வாரிசு அடிப்படையில் என்னுடைய கணவரின் அரசு பணியை எனக்கே வழங்குமாறு கேட்டேன். எந்த தடையும் இன்றி அரசும் எனக்கு பணி ஆணை வழங்கியது. பயணிகள், சக பணியாளர்கள், உள்ளூர் மக்கள் என அனைவரும் மிகவும் அன்பாகவே நடந்து கொள்கிறார்கள். நிறைய பெண்கள் இந்த துறையில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தனது பணி இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.

  • Share on

என்னது... விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடையா? ஏன் தெரியுமா?

மங்களகரமான நாள்.. சர்ப்ரைஸ் கொடுத்த பத்திரப்பதிவுத்துறை!!

  • Share on