
விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளது. பயணிகள் எதை எடுத்துச் செல்லலாம், எதையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விமான நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.
லைட்டர்கள், செல் பேட்டரிகள் போன்ற எரியக்கூடிய பொருள்கள் மற்றும் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து நம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விமானங்களில் காய்ந்த தேங்காய்யை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன் விமானங்களில் இதற்கு தடை செய்யப்படுகின்றன தெரியுமா ? வாங்க பார்ப்போம்
தேங்காய்கள் கடினமான ஓடுகளையும் அதன் உள்ளே ஈரப்பதத்தையும் கொண்டிருக்கும். விமானம் பறக்கும் போது அதிக உயரத்தில் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால் தேங்காய் உடைய வாய்ப்பிருப்பதால் அதற்குத் தடை.
அதுமட்டுமல்லாமல் திரவங்களை எடுத்துச் செல்வதற்குக் கடுமையான விதிகள் விதிக்கப்படுகின்றது. ஒரு தேங்காய் உள்ளே இருக்கும் திரவம் ஹேண்ட் பேக்குகளில் அனுமதிக்கப்படும் 100 மில்லி அளவைவிட அதிகமாக இருப்பதாலும் அது தடை செய்யப்படும் பொருட்களின் கீழே வருகிறது. அதற்கு உள்ளே இருக்கும் திரவத்திற்குள் மறைத்து வைத்து ஏதேனும் எடுத்துச் செல்ல வாய்ப்பிருப்பதாலும் பயணிகள் காய்ந்த தேங்காயை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதங்களாகச் செயல்படக்கூடிய பொருட்கள் பொதுவாக விமானங்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகின்றது. காய்ந்த தேங்காய்கள் கடினமான வெளிப்புற ஓடுகளைக் கொண்டுள்ளது. ஆகவே அவை ஆயுதங்களாகக் கூடப் பயன்படுத்தக்கூடும். விமானத்தைச் சேதப்படுத்தக் கூடும், இது பயணிகளை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்பதில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கவனமாக உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது விமான நிறுவனங்களின் கடுமையான விதிகளில் ஒன்றாகும். எனவே, விமானங்களில் காய்ந்த தேங்காய்யை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.