• vilasalnews@gmail.com

காரில் கட்டுகட்டாக பணம்... லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கினார் இணை சார் பதிவாளர்!

  • Share on

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டியிலிருந்து நேற்று மாலை வாடகை காரில் கிளம்பியிருக்கிறார்.


ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஷாஜகான் காரை திடீரென வழிமறித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரது காரை சோதனை செய்துள்ளனர். காருக்குள் சுமார் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதற்கான விவரம் கேட்டுள்ளனர். மழுப்பலான பதிலைச் சொல்லிச் சமாளித்திருக்கிறார் ஷாஜகான்.


இதனால் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஷாஜகானை அவரின் அலுவலகத்திற்கே திரும்ப அழைத்துச் சென்றுள்ளனர். நேற்றிரவு வரை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. தொடர்ந்து ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்துத் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறுகையில், "எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சார் பதிவாளர் ஷாஜகானின் காரை சோதனை செய்தோம். கணக்கில் வராத 3 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

  • Share on

என்ன கொடுமை சார்...ஓட்டு வீட்டுக்கு 1 லட்சமா? வரி போட்ட மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்!

என்னது... விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடையா? ஏன் தெரியுமா?

  • Share on