• vilasalnews@gmail.com

ராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்த நாள் விழா : தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கத்தின் சார்பில் கொண்டாட்டம்!

  • Share on

விழுப்புரம் மாவட்டம், ஓமந்தூரில் நாளை பிப்ரவரி 1ஆம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு ரெட்டி  நலச்சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் ரவி  ரெட்டியார் தலைமையில் நடைபெறுகிறது.


சுதந்திர இந்தியாவின் முதல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை பிப்ரவரி 1ஆம் தேதி ஓமந்தூரில் உள்ள  மணிமண்டபத்தில் உள்ள இராமசாமி ரெட்டியாரின் திருஉருவச்சிலைக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். 


அதன்பின்னர் மாநில தலைவர் ரவி  ரெட்டி தலைமையில் சங்க கொடியை ஏற்றி வைத்து விழாவின் துவக்கமாக  கடவுள் வாழ்த்து மற்றும் பி.எஸ். ஜெயப்பிரகாஷ் வரவேற்புரையும், மாநில கெளரவ தலைவர் ராமச்சந்திரன், மாநில துணைத் தலைவர் சண்முகையா, விழுப்புரம் வடக்கு மாவட்ட உயர் மட்ட குழு ரமணன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ரவீந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


தென்னிந்திய ரெட்டி நலச்சங்கத்தின் தலைவர் முத்துமல்லா, தொழில் அதிபர் ராஜ மோகன், ஓமந்தூர் ஓ.வி. வெங்கடாசலபதி, விழுப்புரம் மாவட்ட தலைவர் ரவீந்திரன், சென்னை முத்தமிழ் செல்வி நாராயணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழா சிறப்புரையாற்றுகின்றனர்.


சேகர், ரவிச்சந்திரன் ரெட்டி, அருணாசலம், இளங்கோவன், நீல் ராஜ், மகேஷ்வரன், பாஸ்கரன், பாலசுப்பிரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். 


மாநில பொதுச்செயலாளர் ராஜா பூர்ண சந்திரன் விழா தீர்மான விளக்க உரையும், வைத்தியலிங்கம், கே. கே. எஸ். எஸ். வி. டி.சுப்புராஜ், வேணுகோபால்,குராமன், ரவிச்சந்திரன், கோகுல் தாஸ், விவேகானந்தன், பாலகுரு, அசோகன், கேசவன் ரெட்டி ஆகியோர் வாழ்த்துரையும், பேராசிரியர். இராம. சீனிவாசன் சிறப்புரையும் ஆற்ற உள்ளனர். மாநில பொருளாளர் அருண்குமார் நன்றியுரையாற்றுகிறார்.


இவ்விழாவில் மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினகள், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்பம் அணி, ஓ. பி. ஆர். நற்பணி மன்ற நிர்வாகிகள், காவடி சிந்துஅண்ணாமலை கவிராயர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்து கொள்கின்றனர்.

  • Share on

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்தநாள் : அழைக்கிறார் இரா.ஜெயராமன் ரெட்டியார்!!

தவெகவில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்... விஜய் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்!

  • Share on