• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் : 2 பேர் கைது!

  • Share on

விளாத்திகுளம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


அதன் பேரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் விளாத்திகுளம் மதுரை பைபாஸ் ரோட்டில் மீனாட்சி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.


அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அந்தக் காரில் தலா 40 கிலோ எடை கொண்ட 20 மூடைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த அய்யனாரூத்தைச் சேர்ந்த மணிகண்டன் ( 40 ) சிவஞானபுரத்தை சேர்ந்த கணேசன் ( 22 ) ஆகியோரை கைது செய்தனர்.


விசாரணையில், இருவரும் வில்வமரத்துப்பட்டி, கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, எட்டயபுரம், மேலகரந்தை உள்ளிட்ட பகுதியில் உள்ள காற்றாலை தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்... விபச்சார தொழில் செய்யும் யூடியூபர் : போலீசில் புகார்!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி : உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்!

  • Share on