• vilasalnews@gmail.com

திரளும் மேகங்கள்.. சென்னை முதல் தூத்துக்குடி வெளுக்கப்போகும் மழை!

  • Share on

தமிழகத்தில் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை முதல் தூத்துக்குடி வரை எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல இடங்களில் மழை விட்டு விட்டு  பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது பல இடங்களில் மழை பெய்தது.


அதே போல, நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று இரவு முதல் இன்று வரை தூத்துக்குடி மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.


தமிழகத்தில் இன்றும் , நாளையும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று அதிகாலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 2 பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதில், அதிகாலை 3 மணிக்கு அவர் வெளியிட்ட பதிவில், தமிழகதின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றுன் மற்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மிகமிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் சென்னை முதல் வேலூர், வேலூர் முதல் டெல்டா, டெல்டா முதல் தூத்துக்குடி மண்டலங்களின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று மதியம், மாலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மயிலாடுதுறையில் மிக கனமழை பெய்துள்ளது. இந்த மாவட்டத்தில் மிக அதிக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.


திருவாரூர், நாகை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. பொங்கலுக்கு முன்பு கடந்த வாரம் பெய்த மழையை விட இந்த மழை அதிகமாக உள்ளது. விவசாயிகள் அறுவடை பணிகளை கவனித்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதே போல தென் தமிழ்நாட்டில் மழை பெய்யும் இடங்களில் பட்டியலில் விரைவில் இணையும். வழக்கம் போல் மாஞ்சாலை பகுதி கவனத்தில் கொள்ளப்படும். பெங்களூரிலும் இன்று ஓரளவு மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.


மேலும், அதிகாலை 3:38 மணிக்கு அவர் இன்னொரு பதிவு செய்துள்ளார். அதில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு நோக்கி மிகவும் சூப்பரான மழை மேகங்கள் நகர்ந்து வருகிறது. இவை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழையை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on

ரூ.50 ஆயிரம் பெற தயாரா? எழுதத் தெரிந்தால் போதும்!

தமிழகத்தை உலுக்கிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்பு!

  • Share on