
தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.
நிகழ்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த போட்டியானது தேசிய அளவில் அஞ்சல் துறையின் மூலம் நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
சமீபகால தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கடிதம் எழுதும் பழக்கம் பள்ளி மாணவர்கள் முதல் அனைவரிடமும் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. எனவே, கடிதம் எழுதுவதின் முக்கியதுவம் மற்றும் எழுத்து பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்திய அஞ்சல் துறை தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியை (DHAI AKHAR Letter) நடத்தி வருகின்றது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கடிதம் எழுதும் போட்டி தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்தாண்டு "எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. இதில், பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.
அஞ்சல் துறை வழங்கியுள்ள தலைப்பில் உள்நாட்டு கடிதத்தில் 500 வார்த்தைகளுக்கும் மிகாமலும், ஏ4 தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். 18 வயதிற்கு கீழ் அல்லது மேல் உள்ளேன் என சுயச்சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம். கடிதத்துடன் வயதிற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும். கடிதங்களை தபால் மூலம் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வைக்க வேண்டும்.
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி
தலைமை அஞசல் துறை பொது மேலாளர், தமிழ்நாடு வட்டம், சென்னை - 600002 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.
ரூ.50 ஆயிரம் பரிசு
இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.
மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.