• vilasalnews@gmail.com

ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பில் கபடி போட்டி!

  • Share on

தென்காசி மாவட்டம், மேல மருதப்புரம்  ரெட்டி இளைஞர் மன மகிழ் மன்றத்தின் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 43ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. 


இந்த கபடி போட்டியை, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் உட்லண்ட்ஸ் ரவி தலைமையில், மாநில துணை தலைவர்  RSR, மாநிலச் செயலாளர் ராஜா பூர்ணசந்திரன், மாநில பொருளாளர் அருண்குமார், இளைஞர் அணி மாநில செயலாளர் மணிகண்டன்  ஆகியோர் துவக்கி வைத்தனர். 


இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க பொருளாளர்  ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ரெட்டி நலச்சங்கத்தின் தலைவர் பெத்துராஜ், செயலாளர் ராஜகோபால், விளாத்திகுளம் வசந்தம் ஜெயக்குமார்  மற்றும் மாநில, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இவ்விழாவின் தலைவர் முருகன், செயலாளர் பழனி வேல் முருகன், பொருளாளர் ரமேஷ் குமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.

  • Share on

மது பிரியர்களே... மாமிச பிரியர்களே உஷார்!

ரூ.50 ஆயிரம் பெற தயாரா? எழுதத் தெரிந்தால் போதும்!

  • Share on