தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை இன்று தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கலாகவும் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவர். அன்றைய தினம், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தென் மாவட்டங்களில் காணும் பொங்கலாகவும் கொண்டப்படும்.
இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சி விற்பனையகங்கள் மூடப்படுவது வழக்கம். எனவே, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதியான நாளை ( புதன்கிழமை ) மதுக்கடை மற்றும் இறைச்சி கூட்டங்களை மூட வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.