• vilasalnews@gmail.com

அண்ணன் காதலித்த பெண் தம்பியுடன் ஓட்டம்

  • Share on

தம்பியுடன் தான் காதலித்த பெண் ஓடிப்போனதால், அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை  கேள்விப்பட்ட தம்பியும் விஷம் குடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சல்லிகோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன், (26) டிப்ளமோ படித்து விட்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தம்பி சின்னகருப்பன், (24) மைக்செட் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பெரியகருப்பன் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் வசிக்கும் தனது உறவுக்கார (16) வயது பெண்ணைக் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார் தம்பி சின்ன கருப்பன். இவர் பல நாட்களாக அந்த  பெண்ணைக் காதலித்து வந்ததாகவும் அந்தப் பெண்ணும் சின்ன கருப்பனைக் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, வெளியூருக்குச் சென்றுவிட்டதால், தான் உயிருக்கு உயிராகக் காதலித்த பெண் தன் தம்பியுடன் ஓட்டம் பிடித்ததை அறிந்த பெரிய கருப்பன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரிய கருப்பன் இறந்ததைக் கேள்விப்பட்ட சின்ன கருப்பனும் துக்கம் தாங்காமல் விஷம் குடித்து உள்ளார்..இவரை உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனை அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காதலி யாருக்குச் சொந்தம் என அண்ணன் - தம்பிக்கிடையே ஏற்பட்ட போட்டியில், தம்பியுடன் காதலி சென்றுவிட்டதால் அண்ணன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அதைக் கேள்விப்பட்ட தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!

  • Share on

காதல் நாடகமாடி பாலியல் தொல்லை தந்த பொறியியல் பட்டதாரி கைது!

பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்

  • Share on