• vilasalnews@gmail.com

விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு!

  • Share on

சிறைகளில் கூட்ட நெரிசலை குறைக்க, விசாரணைக் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட பாரதீய நாகரீக சுரசா சன்ஹிதா சட்டப்பிரிவு 479இன் கீழ் விசாரணை கைதிகளை விடுவிக்க அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


இது தொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் மற்றும் சிறைத் துறை டி.ஜி.பி.களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-


மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கைதிகள் தவிர பிற விசாரணைக் கைதிகள், ஏற்கனவே அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை அனுபவித்திருந்தால் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தும் பாரதிய நியாய சம்ஹிதா, சட்டம் பிரிவு 479ன் கீழ் கைதிகளை விடுவிக்க சிறை கண்காணிப்பாளா்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


முதல்முறை குற்றம் செய்தவா்கள், அதிகபட்ச தண்டனையில் மூன்றில் ஒரு பங்கு வரை அனுபவித்திருந்தால் அவா்கள் நிபந்தனைத் தொகையை செலுத்துவது மூலம் ஜாமீனில் விடுவிக்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

  • Share on

மருதமலை போறீங்களா? இதை கவனிச்சுகோங்க!

அதிர வைக்கும் தென்மாவட்டம்.. ஓர் ஆண்டில் 52 கொலையானவர்களின் நினைவு தினங்கள்.... 16 தலைவர்களின் ஜெயந்திவிழா!

  • Share on