• vilasalnews@gmail.com

ஞானசேகரன் திமுக உறுப்பினரா? யார் அந்த சார்? முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

  • Share on

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். 


அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என்று எதிர்கட்சியினர் பேசி வந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் கொடுத்தார்.


அவரது உரையில், “சென்சிட்டிவான வழக்கில் குறுகிய அரசியல் லாபத்திற்காக வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இது மக்கள் மத்தியில் நிச்சயம் ஈடுபடாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய 86 சதவீத வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறோம்.


பெண்கள் பாதுகாப்பு குறித்து இரண்டு லட்சத்து முப்பதாயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம். சத்யா என்ற மாணவி ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மிகக் குறுகிய காலத்தில் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வாங்கி கொடுத்த அரசு இந்த அரசு.


பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்ட மனம் இல்லை என்றாலும் வீண் பழி சுமத்தாமல் இருக்கலாம்.


அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர் வெளியானதற்கு மத்திய அரசின் கீழ் உள்ள துறையே காரணம். எஃப்.ஐ.ஆர் வெளியானதை உடனடியாக காவல் துறை தெரிவித்து தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய உதவியது.கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, அனுதாபி மட்டுமே. அந்த சார் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.


கடந்த அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. அதிமுகவினரை பார்த்து 100 சார் கேள்விகளை எழுப்ப முடியும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


முதலமைச்சர் பேசும் போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

  • Share on

பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: 4 மாணவர்கள் கைது!

மருதமலை போறீங்களா? இதை கவனிச்சுகோங்க!

  • Share on