• vilasalnews@gmail.com

பாளை., கட்டபொம்மன் சிலை பூங்காவை மாற்றியமைக்க நடவடிக்கை!

  • Share on

சாலை விரிவாக்கத்துக்காக, பாளையங்கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகேயுள்ள பூங்கா மற்றும் படிகட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நீரூற்றுகளுடன் காட்சியளித்த இந்தப் பூங்கா பாா்வையாளா்களை கவா்ந்து வந்தது.


ஆனால், போதிய பராமரிப்பின்மையால் இப்பூங்கா பொலிவிழந்து காட்சித் தருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக சிலை அருகேயுள்ள பூங்கா, படிக்கட்டுகளை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்காக கடந்த 28 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அவ்வாறு பெற்ற கருத்துகள், ஆலோசனைகளை பரிசீலனை செய்து விரைவில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட உள்ளன என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா். மேலும், இந்த பணிகளுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கும் எவ்வித சேதாரமும், இடையூறும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தொலைந்து போன மூலபத்திரத்தின் நகலை வைத்தே பத்திரப்பதிவு : ஐகோர்ட் கிளை உத்தரவு!

மூலப்பத்திரம் இல்லை என்றாலும், போலீஸ் சான்று இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாமா?

  • Share on