• vilasalnews@gmail.com

உள்ளாட்சி தேர்தல் எப்போது? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • Share on

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் விரைவில் நிறைவு பெறவுள்ளது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த சூழலில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதன் மூலம் உள்ளாட்சிகளுக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கான தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுடன் நடத்தி முடிக்கப்பட்டது.


இந்நிலையில், 2019 இல் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக தேர்தல் நடத்துவதற்கு 45 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால் இதுவரை ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை.


ஆகவே, தேர்தல் தள்ளிப் போகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இவர்களின் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றது. இந்த சூழலில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்ற யோசனையிலும் தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் இருந்த நிலையில்,


வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைக்கு பின்னரே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. 

  • Share on

தமிழகத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு காலையிலே பறந்த எச்சரிக்கை!

  • Share on