• vilasalnews@gmail.com

தமிழகத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள்!

  • Share on

தமிழகம் முழுவதும் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் மொத்தமுள்ள 43,131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அமைப்பாளருக்கு மாதம் ரூ.7700 - ரூ.24,200, சமையலருக்கு மாதம் ரூ.4,100 - ரூ.12,500, சமையல் உதவியாளருக்கு மாதம் ரூ.3,000 - ரூ.6000 என்ற சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.


இந்தநிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் தொய்வின்றி, நல்ல முறையில் செயல்பட, சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாக உள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.


நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய (எஸ்டிஎஸ்) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்படும்.


இந்த பணியிடங்கள் நியமனத்திற்கு  கல்வித் தகுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share on

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது!

உள்ளாட்சி தேர்தல் எப்போது? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • Share on