• vilasalnews@gmail.com

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்!

  • Share on

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலக்குறைவால் காலமானார்


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சையும் அளிக்கப்பட்டது.


அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.


இந்தநிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறைவு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

  • Share on

தங்க மூக்குத்தி, தோடுக்காக திருச்சியில் மூதாட்டி கொலை...தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது!

ஓ.பி.ராமசாமி ரெட்டியாருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை!

  • Share on