கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், நாளையும் (டிச. 4) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழக பகுதிகளில், கனமழை இடை விடாமல் கொட்டி தீர்த்தது. பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும் கூட கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த கனமழையால் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் அங்கு பாதிப்பு மோசமானது. அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, பல பகுதிகளில் மழை வெள்ளம் வடியாததால், விழுப்புரத்தில் நாளை (டிச., 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.