• vilasalnews@gmail.com

நாளை ( டிச.,3 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்!

  • Share on

கனமழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் மற்றும் கடலூரில் நாளை ( டிசம்பர் 3 ) செவ்வாய்க்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி மாவட்டத்தையே புரட்டு போட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், திண்டிவனம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியதால் பல இடங்களில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கியது.


விழுப்புரம் மாவட்டத்தில் அணைகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வயல், நகர், கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.


தமிழக அரசும் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருவதோடு,தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடலூர் , விழுப்புரத்தில் நாளை ( டிசம்பர் 3 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

  • Share on

சென்னையில் இருந்து புறப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு - பொதுமக்கள் ஆவேசம்!

  • Share on