• vilasalnews@gmail.com

சென்னையில் இருந்து புறப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்!

  • Share on

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து மன்னார்குடி திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், ராமேஸ்வரம், கொல்லம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருமாறியது. இதற்கு ஃபெஞ்சல் புயல் என பெயரிடப்பட்ட நிலையில், இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதுச்சேரியிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.


புயல் வலுவிழந்த நிலையிலும், தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. அதில் குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கன மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இந்த நிலையில், கனமழை காரணமாக விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே ரயில்வே பாலத்தையொட்டி வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்வதாலும், திருக்கோவிலூர் தண்டரை இடையேயான ரயில்வே பாலத்தில் வெள்ளநீர்  செல்வதாலும் இவ்வழித்தடத்தில் இயங்கும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஆகவே, இன்று வண்டி எண். 16179 சென்னை எழும்பூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக புறப்படும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல வண்டி எண் 20605 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று நவம்பர் 2 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து 16.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


மேலும் வண்டி எண் 20498 பிரோஸ்பூர் ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் சென்னை கடற்கரை அரக்கோணம் காட்பாடி, சேலம், கரூர், திருச்சி வழியாக மாற்றி இயக்கப்படும். செங்கல்பட்டு விழுப்புரம் மற்றும் அரியலூர் நிறுத்தங்களில் நின்று செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வண்டி எண் 16101 சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து இன்று 17.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 18.00 மணிக்கு புறப்படும்.


அதேபோல வண்டி எண் 22661 சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூரில் இருந்து 17.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக 18.45 மணிக்கு புறப்படும். வண்டி எண். 12633 சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து 17.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இன்று ஒரு மணி நேரம் தாமதமாக 18.20 மணிக்கு புறப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி - 6 மாத காலம் சிறைதண்டனை!

நாளை ( டிச.,3 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள்!

  • Share on