அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரியார் சிலையை உடைப்பேன் என பேசியது மற்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடர்பாக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில், தலா 6 மாத காலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஒரு வருட காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.