தமிழக அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அமைச்சர் கே.என்.நேருவிற்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து தன்னுடைய வழக்கமான பணிகளுக்கு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.