டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. இவை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேவையான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை ( 26.,) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.