• vilasalnews@gmail.com

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் செல்ல விரும்பும் பக்தர்கள் கவனத்திற்கு!

  • Share on

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த சதுரகிரி மலை கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இருக்கிறது.


இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்த ரமகாலிங்கம் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு வார்கள்.


இரவில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீரோடை பகுதிகளில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மலையேற அனுமதிக்கப் பட்ட நாட்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்யும் பட்சத்தில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாது என்றும் வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

  • Share on

ஐயப்ப பக்தர்கள் உணர்வை காயப்படுத்திய கானா பாடகி இசைவாணி.. குவியும் கண்டனங்கள்!

ரெட் அலர்ட் எச்சரிக்கை... நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த தமிழக மாவட்டங்கள் தெரியுமா?

  • Share on