கடந்த 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானர். அதனையடுத்து, நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
தற்போது, நடிகை சீதா குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வரும் இவர், இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மாதம் 31-ஆம் தேதி, தான் உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின், தான் அணிந்திருந்த 4 1/2 பவுன் நகைகளை வீட்டில் கழற்றி வைத்துவிட்டு உறங்கியதாகவும். பின்னர், எழுந்து பார்த்தபோது அந்த நகைகள் அனைத்தும் காணாமல் போனதாகவு.. இதனையடுத்து அந்த நகைகளை கண்டுபிடித்து தரவேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து, இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.