• vilasalnews@gmail.com

ஒரே நாளில் தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை கொலை... ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - பரபரக்கும் தமிழகம்!

  • Share on

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.


இந்த நிலையில் தான், சின்னமனையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் மதன் (30). இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மதன் குடும்பத்தினர், ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், மதனைப் பிடிக்கவில்லை என ரமணி கூறியதாகக் கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை, ரமணி பணியாற்றி வந்த பள்ளிக்கு சென்று அங்கு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.


இதனால் மாணவர்கள் அலறி அடித்து வகுப்பறையில் இருந்து வெளியில் ஓடி வந்ததைப் பார்த்த மற்ற ஆசிரியர்கள், அந்த வகுப்பறைக்குள் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரமணி கிடந்துள்ளார்.


இதையடுத்து, அவர்கள், ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மட்டும் அல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு வெட்டு


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று ( நவம்பர் 20 ) பிற்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது, நீதிமன்றத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.


இதையடுத்து, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அவரை உடனிருந்த வழக்கறிஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.தற்போது வழக்கறிஞர் கண்ணன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.


ஒரே நாளில் தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை வெட்டிக் கொலை , ஓசூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்புக்குள்ளாகி உள்ளது.

  • Share on

தமிழக மீனவர்களின் நெஞ்சில் இடியை இறக்கிய இலங்கை அரசு.. அதிர வைக்கும் உத்தரவு!

சென்னையில் பிரபல நடிகை வீட்டில் திருட்டு : போலீஸ் விசாரணை!

  • Share on