• vilasalnews@gmail.com

தமிழக மீனவர்களின் நெஞ்சில் இடியை இறக்கிய இலங்கை அரசு.. அதிர வைக்கும் உத்தரவு!

  • Share on

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி சாதனங்களை கைப்பற்றுவது, மீனவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்துவது என இலங்கை கடற்படையின் அட்டூழியம் வாடிக்கையாக உள்ளது. மேலும், சமீப காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்கும், அந்நாட்டு நீதிமன்றம் கோடி கணக்கில் அபராதமும் விதித்து வருவதும் நடக்கிறது. 


இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி உத்தரவு ஒன்றை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. அதாவது பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அந்நாட்டு கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசு கூறியுள்ளது. அதன்படி இலங்கை வசம் உள்ள 13 தமிழக மீனவர்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மன்னார் மற்றும் மயிலிட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து 5 விசைப்படகுகள் மற்றும் யாழ்பாணத்தில் இருந்து 8 விசைப்படகுகள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசைப்படகும் 50 முதல் 80 லட்சம் ரூபாய் வரை மதிப்புடையதாம்.


பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் அநுர குமரா திசநாயக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு இது போன்ற கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Share on

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு செம குட் நியூஸ்!

ஒரே நாளில் தஞ்சாவூர் அருகே வகுப்பறைக்குள் ஆசிரியை கொலை... ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - பரபரக்கும் தமிழகம்!

  • Share on