திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகரில் எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 இணையர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். மணமக்களுக்கு கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூ.25,000 ரொக்கம் வழங்கி வாழ்த்தினார்.
இந்த திருமண விழாவில், தாலியை எடுத்து ஒரு மணமகனின் கையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுக்கவே, பதட்டத்தில் அந்த தாலியை மணமகனின் தாய் வாங்கி மணகளின் கழுத்தில் கட்டப்போனார். அப்போது, ஏம்மா ஏம்மா தாலியா அங்க கொடுங்க அவரு தான் மாப்ள என மாப்பிள்ளையிடம் தாலியை உதயநிதி சிரித்தபடி கொடுக்கச் சொல்ல, மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமகனின் தாய் செய்த இந்த செயலால் மேடையில் சிரிப்பலை எழுந்தது.