அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் திரையரங்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன், சூர்யா நடித்துள்ள கங்குவா ஆகிய திரைப்படங்கள் ஓடி வருகின்றன. இந்நிலையில், இன்று அதிகாலையில் அங்கு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.