• vilasalnews@gmail.com

போதைப் பொருள் வைத்திருந்ததாக தமிழ் சின்னத்திரை நடிகை கைது!

  • Share on

போதைப் பொருள் வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டையில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் போதை பொருள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு மீனாவிடம் சோதனையிட்ட போது அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் எனும் அதிக வீரியம் கொண்ட போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் யாரிடம், எங்கு இருந்து இந்த போதை பொருளை வாங்கினார், வேறு யாரிடமாவது போதை பொருளை விற்றுள்ளாரா போன்றவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Share on

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்!!

நடிகை கஸ்தூரி தலைமறைவா? வீட்டுக்கு பூட்டு... செல்போன் ஸ்விட்ச் ஆப்!

  • Share on