• vilasalnews@gmail.com

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்!!

  • Share on

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். 


திருப்பதியில் அவரது 3-வது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.


இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


அதிமுகவில் இருந்தபோது எம்எல்ஏ வாக இருந்த செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார். கோவை செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Share on

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 2024 : ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

போதைப் பொருள் வைத்திருந்ததாக தமிழ் சின்னத்திரை நடிகை கைது!

  • Share on