• vilasalnews@gmail.com

நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு.. சென்னை போலீசார் அதிரடி!

  • Share on

இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கு பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில், மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் நீதிமன்றத்தில் இதற்குரிய மன்னிப்பை கேட்க வேண்டும். அவர் மீது காவல் துறை மூலமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியிருந்தனர்.

இந்த அடிப்படையில் தான் தற்போது, நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருபிரிவு மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல், மொழி, இனம், மதம் பற்றி கூறி இருபிரிவு மக்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • Share on

நெல்லையில் பட்டாசு விற்பனை மந்தமா? பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர், செயலாளர் விளக்கம்!

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

  • Share on