தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 8ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
நவம்பர் 7ஆம் தேதி விழுப்புரம், நாகப்பட்டினம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 8ல் தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நவம்பர் 9 அன்று, தஞ்சாவூர், கடலூர், செங்கல் பட்டு, விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.