• vilasalnews@gmail.com

மன்னர்களின் அந்தப்புர மகளிருடன் சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்.... நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு!

  • Share on

தெலுங்கு பேசிக் கொண்டிருந்த நீங்கள் தமிழ் எங்கள் இனம் என்று சொல்லும்போது, எங்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார் என்று திமுகவினருக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில், பிராமணர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி கோரிக்கை விளக்கப் போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பேசியதாவது: அடுத்த தலைமுறையில் யாராவது இறந்தால் கூட கருமாதி செய்வதற்கு கூட அய்யர்கள் இருப்பார்களா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.


இந்த கவலை இந்து சமுதாயத்தின் கவலை. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இன்றியமையாத அங்கமாக வகிக்க வேண்டிய ஒரு குலத்தை ஏன் ஒழிக்கிறார்கள். திராவிடியம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்பு என்பதுதான் முதல் கொள்கை. அதற்கான சார்ந்த கொள்கை தான் பிராமண எதிர்ப்பு. ஏனென்றால் கடவுள் இல்லை என்று அவர்கள் சொன்னால் யார் நம்புவார்கள்.


கடவுள் இருக்கிறார் என்று கோவிலில் பயபக்தியுடன் வழிமுறைகளை கடைப்பிடித்தால் யார் நம்புவார்கள். அப்போது, இந்து சமுதாயம் ஒன்றுபட்டு இருக்குமே. நாலு பேர் ஒன்றுபட்டு இருந்தால் இந்து சமுதாயத்தை யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. அதனால், ஒவ்வொரு சமுதாயத்தையும் பிளவுபடுத்த வேண்டும். பொய்யான கதைகளை புனைந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று கூறியது வெள்ளைக்காரர்களை அல்ல. அய்யர், ஐயங்கார்களைத்தான். இன்று அய்யரும், ஐயங்காரும் ஏன் பொய் சொல்ல மாட்டோம்.


நாங்களும் பொய் சொல்வோமே என்று போய் நிற்கிறார்கள். நாங்களும் குடிப்போம், இறைச்சி சாப்பிடுவோம் என்று நிற்கிறார்கள். இது ஒரு இனத்தை இழிவுபடுத்துவதற்கான துருப்புச் சீட்டை எடுத்துக் கொடுக்கிறீர்கள் அவ்வளவுதான். நம் இனத்தை பார்ப்பான் என்று இழிவுபடுத்துகிறார்கள். நான் திரையுலகில் இருக்கிறேன். அதுவும் பெண்ணாக இருக்கிறேன். அதுக்கென்றே சில வார்த்தைகள் இருக்கின்றன.


சரி பரவாயில்லை. அந்த வார்த்தை திராவிடியா தனத்தை விட கொச்சையான வார்த்தை இல்லை. அப்படியே சொன்னாலும் அது என் சுய உழைப்பை போட்டு உழைக்கிறேன் என்று மகிழ்ச்சியாக கூறுவேன். உங்களைப் போன்று மற்றவர்களைப் பிளவுபடுத்தி, அநியாயமாக பிழைப்பதைவிட என் பிழைப்பு பரவாயில்லை.


சுதந்திரப் போராட்டத்தில் உயிர் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். அதில் பெரும்பாலும் உயிரைக் கொடுத்தவர்கள் தமிழ் அந்தணர்கள்தான். ஆரிய வந்தேறிகள் என்கின்றனர். சைபர் கணவாய் வழியாக யார் வந்தார்கள் என்று ஆய்வு செய்தால் பல சமூகங்கள், மதத்தினர் வந்துள்ளனர். அதையெல்லாம் பேசினால் திராவிடர்களின் ஓட்டு அவர்களுக்கு குறைந்துவிடும்.


சங்க இலக்கிய காலம் முதலே தமிழர்கள் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். கோயில்களில் தெய்வத்துக்கு சேவை செய்து வந்துள்ளனர். ஆரிய பண்பாடு தமிழ்நாட்டில் வரும்போது சத்ரியர்கள் என்ற இடத்தில் வன்னியர்களும், தேவர்களும் இணைந்து கொண்டார்களோ, வைசியர்கள் என்ற பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள் இணைந்து கொண்டார்களோ, கோயில் பணிகளில் சிவாச்சாரியார்கள், ஐயங்கார்கள், அய்யர்கள், பண்டாரங்கள் போன்றோர் இணைந்து கொண்டனர்.


அவற்றை எல்லாம் மறந்துவிட்டு நேற்று வந்தவர்கள்போல அய்யர், ஐயங்கார்களை நடத்துகின்றனர். மன்னர்களின் அந்தப்புர மகளிருடன் சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் இன்று தமிழ் எங்கள் இனம் என்று சொல்லும்போது, எப்போதோ வந்த அய்யர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார். அதனால்தான் திராவிடர் என்ற சொல்லைக் கொண்டு வந்துள்ளனர்.


ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆதிகுடிகளான பறையர்களுக்குத்தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசுபவர்களுக்கு நிறைய கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.


அமைச்சரவையில் ஐந்து தெலுங்கு மொழி பேசும் நபர்கள் உள்ளனர். அவர்கள் எதையோ கொடுத்துவிட்டு போகட்டும். நம் உரிமையையும், பிழைப்பையும் அவர்கள் நம்மிடம் இருந்து பிடுங்காமல் நாம் தடுக்க வேண்டும் என்றார்.

  • Share on

தமிழகத்தில் ஒரு வாரம் வெளுக்கும் கனமழை : எந்தெந்த தேதிகளில், எந்தெந்த ஊர்கள்? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நெல்லையில் பயணியை தாக்கிய பேருந்து நடத்துனர்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

  • Share on