• vilasalnews@gmail.com

தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

  • Share on



சாலை விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழின் உரிமையாளர் மணிமாறன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் திரு.மணிமாறன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், தினபூமி பணியாளர்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Share on

தினபூமி நாளிதழ் உரிமையாளர் விபத்தில் உயிரிழப்பு!

மிக கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • Share on