புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வர உகந்த நேரத்தை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாத பவுர்ணமி அக்டோபர் 16 ஆம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 17 ஆம் தேதி மாலை 5.38 மணிக்கு நிறைவுபெறுகிறது. இது கிரிவலம் வர உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.