விசிகவின் மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வாசித்தார்.
- மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும்.
- மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும்.
- மதுவிலக்கினால் பாதிக்கப்படும் மாநிலத்திற்கு கூடுதல் நிதியளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதுவால் மனித வளம் பாதிக்கப்படுவதால் மதுவிலக்கு விசாரணை ஆணையம் கொண்டு வர வேண்டும்.
- மதுவிலக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக கடைகளை மூட வேண்டும்.
- மது ஒழிப்பிற்கான விழிப்புணர்வு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
- அரசியலமைப்பு சட்டம் 47ல் கூறியபடி மதுவிலக்கிற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.
- குடி நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மையங்களை அரசு அமைக்க வேண்டும்.
- மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.
- டாஸ்மாக் மதுவிற்பனை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்.
- தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். இதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- மதுவிலக்கு பரப்பு இயக்கத்தில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கேடாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல. அனைத்து தரப்பினரின் முதன்மையான கடமை ஆகும்.
இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.